யேமனில் பல நாட்களாக இடம்பெற்றுவரும் தொடர் மோதல் சம்பவங்களில் இதுவரை 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 260 பேர் காயமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை முதல் தலைநகர் ஏடனில் இடம்பெற்றுவரும் மோதல் சம்பவங்களிலேயே இவர்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
சர்வதேச ஆதரவுடைய அரசாங்கத்திற்கு ஆதரவான படைகளுடன் பல நாட்கள் இடம்பெற்ற மோதலின் பின்னர், யேமன் பிரிவினைவாதிகள் துறைமுக நகரமான ஏடனை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
குறிப்பாக இராணுவ முகாம்கள் மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகியன அவர்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
சவுதி அரேபியா மற்றும் அதன் நட்பு நாடான ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் தலைமையிலான – ஈரானுடன் இணைந்த ஹூத்திகளுடன் ரியாத்தை தளமாகக் கொண்ட யேமன் ஜனாதிபதி அபேத்ராபோ மன்சூர் ஹாடியின் இராணுவம் மோதலில் ஈடுபட்டு வருகின்றறமை குறிப்பிடத்தக்கது.