பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள வன்கூவர் நகரின் ஹொவே சவுண்ட் பகுதிக்கு அருகே, The Sea to Sky Gondola என்ற கேபிள் கார் மூலம் அப்பகுதியை சுற்றிப்பார்க்கும் சுற்றுலாத் தலம் அமைந்துள்ளது.
அது சுமார் மூவாயிரம் அடி உயரத்தில், கேபிள் கார்கள் கடற்பரப்பின் மேல் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு காரிலும் 8 பேர் வரை அமர்ந்து சென்று, கடல் மற்றும் சுற்றி உள்ள அருவி உள்ளிட்ட இயற்கைக் காட்சிகளை பார்த்து ரசிக்கலாம்.
இந்த நிலையில், நேற்றைய தினம் கேபிள் கார்கள் இணைக்கப்பட்டிருந்த 2 அங்குல திடமான கம்பி அறுந்ததால்பல கேபிள் கார்கள் தரையில் வீழ்ந்தன.
இதனால் அதில் இணைக்கப்பட்டிருந்த 30 கார்கள் வரை பலத்த சேதமடைந்தன. இச்சம்பவம் இடம்பெற்றபோது கேபிள் கார் சேவை இயக்கப்படவில்லை என்றும், அதில் யாரும் காயமடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சில விஷமிகள் வேண்டுமென்றே பிரச்சனையை தோற்றுவிக்கும் வகையில் கேபிள்களை அறுத்துள்ளதாக பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் விபத்து இடம்பெற்ற பகுதிக்கு யாரும் செல்லவேண்டாம் என்றும் பொலிசார் அறிவித்துள்ளனர்.