விஷேட தேடுதல் நடவடிக்கையொன்றின் போது, வீடொன்றில் இருந்து 2000 கஞ்சா சாடிகளை மாகாண பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
மாகாணத்தின் கூட்டு கஞ்சா அமுலாக்கக் குழு உறுப்பினர்கள், நயாகரா பிராந்திய பொலிஸாருடன் சேர்ந்து, ஒகஸ்ட் 10ஆம் திகதி மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே, கண்டுபிடித்தனர்.
இதன்போது, செயின்ட் கேதரைன்ஸைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவரையும், மார்க்கமைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கஞ்சா சட்டத்திற்கு மாறான ‘ஒரு குடியிருப்பு வீட்டில் பயிரிடக்கூடாது’ என்ற குற்றத்திற்கு அமைய, இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.