இலங்கைப்படைகளால் படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலைய மாணவனுமான ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 12வது நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று (வியாழக்கிழமை) குறித்த நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதிக்கு அருகில் உள்ள ஊடக சுதந்திரத்திற்காக தமது இன்னுயிரை ஈந்த ஊடகவியலாளர்கள் நினைவு தூபி பகுதியில் மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
2007 ம் ஆண்டு ஓகஸ்ட் 01ம் திகதி அதிகாலை 5 மணியளவில் வீட்டில் பெற்றோரின் முன்னிலையில் வைத்து இராணுவப்புலனாய்வு பிரிவினாரால் அவர் படுகொலை செய்யப்பட்டார்.