பிரதமர் மோடியை சந்திப்பதற்காக வரும் செப்டம்பர் 9ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்வார் என இஸ்ரேல் அரச வட்டாரங்கள் சார்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரத்துக்கு பின்னர் இந்திய வரலாற்றில் முன்னர் எப்போதும் இல்லாத வகையில், யூதர்களின் நாடான இஸ்ரேலுக்கு சென்ற முதல் பிரதமர் என்ற முறையில் கடந்த 2017ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஜெருசலேம் சென்றார்.
அதன்பின்னர் பெஞ்சமின் நெதன்யாஹு கடந்த ஆண்டில் அரசமுறைப் பயணமாக இந்தியாவுக்கு விஜயம் செய்தார்.
இந்நிலையில், இஸ்ரேல் நாட்டின் அரசியல் வரலாற்றில் நீண்ட காலமாக (12 ஆண்டுகள்) பதவி வகித்த முதல் பிரதமர் என்ற சாதனையை பெஞ்சமின் நெதன்யாஹு நேற்று எட்டினார்.
ஒருநாள் பயணமாக மட்டும் டெல்லிக்கு செல்லும் இஸ்ரேல் பிரதமரின் நிகழ்ச்சி நிரல்கள் தொடர்பாக இந்திய அரசு சார்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.
இதேவேளை, இஸ்ரேல் நாட்டில் கூட்டணி அரசை ஏற்படுத்த பெஞ்சமின் நெதன்யாஹு எடுத்த முயற்சிகள் பின்னடைவை சந்தித்ததால் இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு செப்டம்பர் 17ஆம் திகதி மறுதேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அவர் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.