விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (வியாழக்கிழமை) இரவு 7.30 மணியளவில் தாண்டிக்குளத்தில் இருந்து குருமண்காட்டை நோக்கி சென்ற டிப்பர் வாகனம் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது நல்லலிங்கம் உசாந்தன் வயது 23 என்ற இளைஞன் காயமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உடனடியாக அங்கிருந்தவர்களால் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை அப்பகுதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.