![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJH6hV8uvY187RdxJ4HuBBMQFnsbK0-Bw7nLG6uPC3zLbp7r1NyyGxaxxEvRt7Eu0N3AVsfJa8MkN1JxXWsPo3GEOKvDUhewNu9tRdl36ttQGzHEVal1QM7IsX0t5nne78aPD_BWbUaW4/s320/EAKKwe1WsAAsini.jpg)
ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்துங்கள் என கோரிக்கை விடுத்து பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலம் முன்பாக போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
புலம்பெயர் உறவுகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப்போராட்டத்தில் பெருந்திரளானவர்கள் பங்கெடுத்திருந்தனர்.
திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று மற்றும் பிள்ளையார் கோயில் பிரச்சினை தற்போது பூதாகரமாக எழுந்துள்ள நிலையிலேயே இந்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்று வருகின்றது.
கறுப்புயூலை தமிழினப் படுகொலைக்கு நீதிகோரி….
இதேவேளை கறுப்புயூலை தமிழினப் படுகொலைக்கு நீதிகோரி, நேற்று முன்தினம் பிரித்தானிய பிரதமர் வாசஸ்தலத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்த இந்த போராட்டத்தில் காலம் பல கடந்து சென்றாலும் ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் ஆன்மாவில் ஓர் பெரும் துயர வடுவாக நிலைத்திருப்பதோடு, என்ன விலை கொடுத்தேனும் அரசியல் சுதந்திரத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற பற்றுறுதியை தமிழர் தேசத்திடம் கறுப்பு யூலை நினைவுகள் விதைத்திருக்கின்றன என இக்கவனயீர்ப்பு போராட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)