பொலிஸ் தலைமையகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறுத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர் அத்தரலிய ரத்தன தேரர், மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தாக்கல் செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டுக்கமைய, குற்ற விசாரணை திணைக்களத்தின் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் இது குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.