
இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு ஜூன் மாதம் 10ஆம் திகதி , தான் அனுப்பிய இராஜினாமா கடிதத்தின் நகலை இன்று (ஞாயிற்றுக்கிழமை) டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
கடந்த ஜுன் மாதம் 6ஆம் திகதி அமைச்சரவை மாற்றப்பட்டபோது சித்துவிடம் இருந்த அதிகாரங்கள் பறிக்கப்பட்டிருந்தன. இதன்காரணமாக அவர் பதவி விலகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரராக அறியப்பட்ட நவ்ஜோத் சிங் சித்து, காங்கிரஸ் கட்சியில் இணைந்துக்கொண்டார்.
இதன் பின்னர் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று சுற்றுலாத்துறை, மற்றும் கலாச்சார அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
