அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, பலாங்கொடை, இரத்தினபுரி – வௌல்வத்த வீதி ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெய்து வரும் கனம் மழை காரணமாகவே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.
இதன்காரணமாக குறித்த பகுதிகளிலுள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.