நெருக்கமாக ஆராய்ச்சி செய்வதற்காக ’ஆதித்யா எல்-1’ என்ற விண்கலத்தை அடுத்த ஆண்டு ஏவுவதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ திட்டமிட்டுள்ளது.
சந்திரயான்-2 விண்கலத்தை இன்று (திங்கட்கிழமை) வெற்றிகரமாக ஏவி பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்திய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ அடுத்தக்கட்டமாக சூரியன் தொடர்பான ஆராய்ச்சியை தொடங்கவுள்ளது.
சுட்டெரிக்கும் தீக்கோளமான சூரியனுக்கு மிக நெருக்கமாக சென்று அதன் வெளிவிட்டத்தில் பல்லாயிரம் கிலோமீட்டர்கள் பரப்பளவில் அகன்று, விரிந்து கிடக்கும் வீரியமிக்க ’கொரோனா’ எனப்படும் ‘பிளாஸ்மா’ கதிர்களைப் பற்றி துல்லியமாக ஆராய்ச்சி செய்ய ‘இஸ்ரோ’ திட்டமிட்டுள்ளது.
இதற்காக உருவாக்கப்படும் ‘ஆதித்யா-எல்1’ விண்கலம் அடுத்த ஆண்டின் ஜூன் மாதத்துக்குள் விண்ணில் செலுத்தப்படலாம் என தெரியவந்துள்ளது.
இந்த ஆராய்ச்சி தொடர்பாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் அண்மையில் கூறுகையில், ‘பூமியில் இருந்து 15 இலட்சம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சூரியனின் கரோனா பகுதியில் இவ்வளவு வெப்பம் உண்டாவது ஏன்? என்பது சூரியன் தொடர்பான இயற்பியலில் இதுவரை விடைகாண முடியாத கேள்வியாக உள்ளது.
சூரியனின் கரோனா பகுதியில் உள்ள வெப்பமானது பருவநிலை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பதால் இதுதொடர்பான ஆராய்ச்சிக்காக இந்தியா விரைவில் அனுப்பும் விண்கலம் எப்போதுமே சூரியனை நோக்கிவாறு ஆய்வுகளை மேற்கொள்ளும்” என்று குறிப்பிட்டிருந்தார்.