அமைக்க வாய்ப்பு தர வேண்டும் என்று அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் நீடிக்கும் அரசியல் குழப்பம் குறித்து செய்தியாளர்களுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. ஆனாலும் பெரும்பான்மையை நிரூபிப்பதாக கூறியதையடுத்து சட்ட சபையில் விவாதம் நடைபெற்று வருகிறது.
இன்று விவாதத்தை நீடிக்காமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் சட்ட சபையில் நீடிக்கப்பட்டால் அது ஜனநாயகத்துக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு தோற்பது உறுதி. இதனை அடுத்து, பா.ஜனதா அரசு ஆட்சியமைக்க வாய்ப்பை ஏற்படுத்தித்தர வேண்டும். இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கையை பா.ஜனதா அரசு மேற்கொள்ளும் என குறிப்பிட்டுள்ளார்