கிடைக்கும் என வழங்கப்பட்டுள்ள உறுதிமொழியானது வாக்குகளை அபகரிப்பதற்கான கருத்து என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
3 வருடங்களில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்கப்படும் என ரணில் விக்ரமசிங்க யாழில் நேற்று தெரிவித்திருந்த நிலையில், இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அவர், “3 வருடங்களில தீர்வுத் திட்டம் வரும் என்று சொல்லப்படுகிறது. இது தேர்தலை மையப்படுத்தி தெரிவிக்கப்படுகின்ற ஒரு விடயமாகும்.
நாம் நீண்டகாலமாக அடிக்கடி கூறும் விடயம், எந்தவொரு அரசாங்கமும் ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் அல்லது ஒரு வருடத்துக்குள் முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வினை தராவிட்டால அது பழைய விடயமாகிவிடும்.
எனவே, 2 அல்லது 3 வருடங்களில் தீர்வுத் திட்டம் என்பது பொய்யான முன்வைப்பு என்பதுடன், அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இல்லை என்பதையும் ஏற்க முடியாது.
ஏனென்றால், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் ஆதரவுடன் இந்த அரசாங்கம் பெரும்பான்மையை பல தடவை நிரூபித்திருக்கிறது.
அவ்வகையில், பெரும்பான்மையுள்ள அரசாங்கமாகவே இது காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற விமர்சனம் மக்களிடத்தில் எழுந்துள்ளது” என்று அவர் தெரிவித்தார்.