நாடெங்கும் செயல்படும் சிறுவர் இல்லங்களின் முகாமைத்துவங்களை மேலும் மேம்படுத்தி இல்ல சிறார்களின் எதிர்காலத்தினை மேலும் சிறப்பாக கொண்டுவர தேவையான உளவளப்படுத்தல் நடவடிக்கையினை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தற்போது மேற்கொண்டு வருகின்றது.
சிறுவர் மற்றும் மகளீர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டாரவின்ஆலோசனைக்கமைய எடுக்கப் பட்டு வரும் இந்த நடவடிக்கைக்கமைய ஆரம்பக்கட்டமாக அரசநியதிகளுக்கமைய செயல்படும் சிறுவர் இல்லங்களின் ,முகாமையாளர்கள், மேற்பார்வையா ளர்கள், மற்றும் சிறுவர் நலன் அரசசேவை உத்தியோகத் தர்களுக்கு விசேட பயிற்சிசெயல மர்வுகளை நடாத்தி தேவையானஅறிவூட்டல்கள் வழங்கப்பட் டுவருகின்றன
.இந்த விசேட திட்டத்தின் கீழ்மட்டக்களப்பு மாவட்டத்தில்செயல்படும் சிறுவர் இல்லங்களின் ,முகாமையாளர்கள், மேற்பார்வையாளர் கள்,மற்றும் சிறுவர் நலன் அரசசேவை உத்தியோகத் தர்களுக்கு விசேட உளவளப்படுத்தல் செயலமர்வு இன்று 1 1 மாவட்ட செயலகத்தில் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி. நிசாரியாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்த உளவளப்படுத்தல் செயலமர்வினை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வைபவ ரீதியாக ஆரம்பம் செய்துவைத்தார்.
மேலும் இச்செயலமர்வின்போது எதிர்காலத்தில் சிறுவர் இல்லங்களின் பணிகளை மேலும் நேர்த்தியாக்க தேவையான இல்ல ஆவணங்களை அரசபொறி முறைக்கேற்ப நேர்த்தியாகப்பேணவும்,சிறந்தசு ற்றுப்புறசூழல், சிறந்த முகாமைத்துவஆளணியை உருவாக்குதல்,இல்லபிள்ளைகளின் உணர்வு பூர்வமான விடயங்களை கையாழுதல் போன்றவற்றின் நேர்த்தியான செயல்பாடுகள்பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் சிறுவர் இல்லங்களில் எதிர்காலத்தில் சந்தோசமானமற்றும் குடும்ப சூழலை ஏற்படுத்துதல்,சிறுவர்களை சமூகத்தில் மீள இணைத்தல்,எதிர்காலத்தில் நடவடிக் கைகளை திட்டமிடுதலும் தொழில் வழிகாட்டுதல்களைவழங்கவும் எடுக்கவேண்டிய நடவடிக்கைகளும் ஆராயப்பட்டன.
இதில் மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், மகப்பேற்று நிபுணர் கலாநிதி என்.திருக்குமார்,,சிரேஸ்ட சிறுவர் நன்ன டத்தை அதிகாரிஎம்.எச்.நஜுமுதீன் உட் பட பல சிறுவர் நலன்சேவை அதிகாரி கள் வளவாளர்களாகக் கலந்து கொண்டு போதிய அறிவூட்டல்களை வழங்கியதாக .மாவட்ட அரச ஊடகப்பிரிவு தகவல் மேலும் தெரிவிக்கின்றது.
இங்கு கருத்து வெளியிட்ட மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த்எமது மாவட்டத்தில் செயல்படும் சிறுவர் இல்லங்கள் பெருத்த அளவில் முறைப்பாடுகள் வராமல் இருப்பதற்றுக்கு நிருவாகி களுக்குபாராட்டுக்கள் தெரிவிப்பதுடன் சிறார்களின் எதிர்காலத்தை சிறப்பாகக்கொண்டுவரவேண்டுமென் பதில் அரசாங்கம் அக்கறை கொண்டிருப்பதாகவும்இதற்கமையவே அரசாங்க அதிபர் சிறுவர் இல்லங்களை விசேட மேற்பார்வைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்து கண்டறியப்பட்ட இடைவெளிகளை நிவர்த்திப்பதே இந்த செயலமர்வின் நோக்கமாகுமென தெரிவித்தார்.
இந்த செயலமர்வின்மூலம் சிறுவர் இல்லங்களில் இம்மாவட்டத்தில்சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மாவட்டஅரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் வழிகாட்டுதலில் நடாத்தப்பட்டமேற்பார்வை ஆய்வுகளுக்கமைய கண்டறியப்பட்ட இடைவெளிகளை நிவர்த்தி செய்வதுபற்றி ஆராயப்பட்டதாக மாவட்ட அரச ஊடகப்பிரிவு தகவல் தெரிவிக்கின்றது.