அமெரிக்கத் தூதுவர் அதுல் கெஷாப், பிரதம பிரதி இராஜாங்கச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் கிழக்காசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்குப் பொறுப்பான பணியகத்தின் பிரதம பிரதி இராஜாங்கச் செயலாளராக பணியாற்றவுள்ளார்.
அதுல் கெஷாப், நேற்று (வெள்ளிக்கிழமை) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கெஷாப், தனது 25 வருடகால அமெரிக்க இராஜதந்திர சேவையில் இலங்கை, இந்தியா, மொரோக்கோ, கினியா மற்றும் மாலைதீவுக்கான தூதுவராகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.