World Intellectual Property Organisation, Cornell University மற்றும் INSEAD என்ற மூன்று அமைப்புகள் இணைந்து புதுமை விரும்பும் நாடுகளின் பட்டியலினை வெளியிட்டுள்ளன.
ஆய்வு, தொழில்நுட்பம் மற்றும் ஆக்கத்திறன் உள்ளிட்ட 80 தரநிலைகளின் அடிப்படையில் 129 நாடுகள் இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஸ்வீடனும் அமெரிக்காவும் குறித்த பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. அத்துடன், இஸ்ரேல் முதல் பத்து இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளது.
புதுமைக்காக செலவிடப்படுதல், மெதுவாக இருந்தாலும் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாகவும் பட்டியலை தயாரித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.