வகையில் நகர நவீன மயமாக்கல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரத்தில் துரித அபிவிருத்திகளை விரைவில் காணமுடியும் என்பதுடன், இந்து சமுத்திரத்தில் கொழும்பை ஒரு முக்கிய நகரமாக மாற்றுவதே இந்த திட்டத்தின் நோக்கம் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஹெட்டிபொல பிரதேசத்தில் இன்று (சனிக்கிழமை) வாராந்த சந்தைக் கட்டிடத் தொகுதியொன்று திறந்து வைக்கப்பட்ட நிகழ்வின் பின்னர் உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.
கொழும்பு, கண்டி போன்ற பிரதான நகரங்கள் மாத்திரமன்றி நாட்டின் ஏனைய அனைத்து நகரங்களிலும் பாரிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவை அபிவிருத்தி நோக்கில் மாத்திரம் முன்னெடுக்கப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
அதேவேளை, வரும் 5 முதல் 10 வருடங்களுக்கு இந்தப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேல் மாகாணத்தில் கொழுப்பை அண்டிய பிரதேசங்களில் மாநகரங்களை ஸ்தாபிக்கும் நோக்கிலான வேலைத் திட்டங்களும், இலகு ரயில் சேவைகளும், புதிய வீடமைப்புத் திட்டங்களும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும். கொழும்பு நகரத்தில் துரித அபிவிருத்திகளை விரைவில் காணமுடியும் என்பதுடன், இந்து சமுத்திரத்தில் கொழும்பை ஒரு முக்கிய நகரமாக மாற்றுவதே இந்த திட்டத்தின் நோக்கம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்னர் நாட்டை கட்டியெழுப்புவது கடினம் என்று பலர் கருதினார்கள். எனினும் அந்த சவால்களுக்கு மிகவும் வலுவுடன் முகங்கொடுத்ததன் காரணமாக நாடு தளராமல் திடமாக இருந்தது.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் மூன்று மாதங்கள் நிறைவடைகின்றன. இந்த தாக்குதல்கள் காரணமாக நாட்டு மக்களிடையே பாரிய அச்சம் ஏற்பட்டது. அந்த அச்சம் நாடு முழுவதும் துரிதமாக பரவியது. தொடர்ச்சியாக குண்டுத் தாக்குதல்கள் இடம்பெறும் என்று சிலர் நம்பினார்கள். பொருளாதாரம் சீர்குலைந்து நாடு நெருக்கடியை சந்திக்கும் என்று அவர்கள் நினைத்தார்கள்.
எனினும், தாக்குதல்கள் இடம்பெற்று மூன்றே மாதங்களில் நாட்டை மீண்டும் உறுதியான நிலைக்கு கொண்டுவருவதற்கு எங்களால் இயலுமாக இருந்தது. நாட்டை மீண்டும் உறுதியான நிலைக்கு கொண்டு வந்தவுடன் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டதாக நாங்கள் நினைக்கக் கூடாது.
கடந்த அரசாங்கம் மிலேச்சத்தனமாக கடன்களை பெற்றதன் காரணமாக இன்று நாட்டில் பாரிய கடன் சுமை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் 5 வருடங்களில் இந்த கடன் தொகையை செலுத்தி முடிக்கும் நோக்கில் ஏற்றுமதியை அதிகப்படுத்தி வருமானத்தை அதிகரிக்க வேண்டும். அதேபோன்று ஏனைய துறைகளிலும் முன்னேற்றம் அவசியம் என பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.