ப்ரீதி படேலின் முகநூல் பக்கத்துக்கு, அவரை இனவெறியுடன் விமர்சித்து கடந்த 2018-ஆம் ஆண்டு சில குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டிருந்தன.
இதுகுறித்து விசாரணை செய்த பொலிஸார் ஜெரார்ட் ட்ரெய்னர் (55) என்ற சந்தேக நபரை கடந்த ஜனவரி மாதம் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு மீதான விசாரணை, மான்செஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு மீதான விசாரணை முடிவடைந்ததையடுத்து, நீதிபதி சைமன் பிரையன் தீர்ப்பளித்தார்.
குறித்த தீர்ப்பில், ஜெரார்ட் ட்ரெய்னருக்கு 22 மாதங்கள் சிறை தண்டனை விதித்து அவர் உத்தரவிட்டுள்ளார்.