அமெரிக்கா, கனடாவிற்கு திருப்பி அனுப்புவதற்கு கம்போடிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சுமார் 1600 ரொன் எடையுடைய பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் இவ்வாறு திருப்பி அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவிலிருந்து 70 கொள்கலன்களும் கனடாவிலிருந்து 13 கொள்கலன்களும் கம்போடியாவின் மீன்பிடிக் கிராமமொன்றிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
எனினும், இதனை நாட்டிற்குக் கொண்டுவந்த நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என கம்போடிய சுற்றாடல்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மீள்சுழற்சிக்காக, சில மேற்கத்தேய நாடுகள் தமது நாட்டின் பிளாஸ்டிக் கழிவுகளை சீனாவுக்கு அனுப்புகின்றன.
எனினும், வெளிநாட்டுக் கழிவுப் பொருட்களுக்கு சீனா கடந்த வருடம் தடை விதித்திருந்தது.
இந்தநிலையிலேயே கழிவுப்பொருட்கள் கம்போடியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.