தொடர்ந்து அனர்த்த நிலைமைகளின் போது உதவிக்காக பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 011 245 4576 மற்றும் 011 258 7229 ஆகிய இலக்கங்களுக்கு அனர்த்த நிலைமைகளின் போது பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் வழங்க முடியுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை அடுத்து மண்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு வருகின்றது. இதையடுத்து குறித்த அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்கும் மக்கள் பொலிஸாருடன் தொடர்பு கொள்வதற்காக குறித்த தொலைபேசி இலக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கம்பஹா, கொழும்பு, கேகாலை, கண்டி, களுத்துறை, நுவரெலியா, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மன்னார், குருணாகல், கம்பஹா, கொழும்பு, கேகாலை, கண்டி, களுத்துறை, நுவரெலியா, இரத்தினபுரி, காலி, மாத்தளை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.