மன்னார் மாவட்ட தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்நிகழ்வு இடம்பெற்றது.
ஜனநாய ரீதியில் தமிழர் வாழ்வுரிமை சார்பான விடயங்களை முன்னிறுத்தி அரசியலுக்கு அப்பால் தமிழ் மக்களின் வாழ்வியல் நகர்வுகளை முன்னெடுக்கும் விதமாக இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், சிவில் சமூக ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மத குருக்கள் மற்றும் தமிழர் வாழ்வுரிமை இயக்கத்தின் அங்கத்தவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, இயக்கத்தின் செயற்பாடுகள் மற்றும் கொள்கைகள் தொடர்பாக விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் எதிர்வரும் காலங்களில் தமிழர் வாழ்வுரிமை இயக்கம் மாவட்ட, பிரதேச, கிராம ரீதியில் ஜனநாயக ரீதியில் மேற்கொள்ள இருக்கும் அரசியல், சமூக, கலாசார விழிர்ப்புணர்வு கருத்தமர்வுகள், துண்டுப்பிரசுர விநியோகம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
தொடர்ச்சியாக அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களின் நிலம், உரிமை, காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், அரசியல் கைதிகள் தொடர்பான விடயங்களில் முன் நின்று செயற்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.