இளைஞர்கள் நால்வரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நால்வரும் நேற்று (திங்கட்கிழமை) இரவு பெருமாள் கோவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் இருந்து சுமார் 20 மில்லி கிராம் ஹெரோயினும் மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 22 வயதுடைய இளைஞர்கள் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த நால்வரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் , விசாரணையின் பின்னர் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.