![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCuNfgnaytKWG4x1ipr4Qabd3-C1BMv0R4IplMSMK8vztSbOJFXfwVF_lvhUt4VwxHhmmNXjNgikslwKTC0ay7Yfyde2FIM5r3fSBpmf3yDefUxWsLO6WEZ-4Bp__uE5JsnSx1CvoJHRY/s320/water-fountain-heat-720x438.jpg)
(Ontario) போன்ற பகுதிகளில் வெப்பநிலை 40 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடும் வெப்பத்தால் சிறார்களும், முதியவர்களும் அதிகம் பாதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தால், எதிர்பாராமல் உலகின் பல இடங்களில் மிதமிஞ்சிய வெப்பநிலை ஏற்படுவதாகப் பருவநிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதேவேளை, அமெரிக்காவின் பல பகுதிகளில் இந்தவார இறுதியில் வெப்பநிலை 38 பாகை செல்சியஸை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் நியூயோர்க், வொஷிங்டன், பொஸ்டன் போன்ற நகரங்களை வெப்பம் கடுமையாக தாக்கும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. சுமார் 200 மில்லியன் பேர் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில், நியூயோர்க் முதல்வர் மாநிலம் முழுவதும் அவசர நிலையை அறிவித்துள்ளார். சுமார் 500 ‘குளிர்விக்கும் நிலையங்கள்’ திறக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)