பிரான்சிலிருந்து வெளியே பயணிக்கும் பயணிகளின் பயணச்சிட்டையில் மேலதிகமான வரி சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் அரசாங்கத்தினால் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
eco-tax எனப்பெயரிடப்பட்டுள்ள குறித்த புதிய வரி, எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரான்சில் இருந்து வெளிநாடுகளுக்கு புறப்படும் பயணிகளுக்கு மாத்திரம் இந்த வரி எனவும், பிரான்ஸிற்கு வருகை தரும் பயணிகளுக்கு இந்த வரி சேர்க்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் இருந்து புறப்படும் எந்த வித பயணிக்கும், எந்த வகை பயணங்களுக்கும் இந்த வரி பொருந்தும் எனவும், ஒரு பயணச்சிட்டைக்கு €1.50 இல் இருந்து €18 வரை மேலதிமான வரி சேர்க்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த வரியினால் வருடத்துக்கு €182 மில்லியன்கள் வருவாய் ஏற்படும் எனவும், இதனை சுற்றுச்சூழல் விரிவாக்கத்துக்கு பயன்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வரி, எயார் பிரான்ஸ் தவிர்த்த ஏனைய அனைத்து விமானங்களுக்கும் பொருந்தும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.