காயமடைந்தவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் பணி துரிதப்படுத்தப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடந்த பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களில் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடாக மொத்தம் 262 மில்லியன் ரூபாய் இதுவரை செலுத்தப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் பிரதமர் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட 201 பேரின் உறவினர்களுக்கு இழப்பீடாக 198 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இதேவேளை தாக்குதல்களால் காயமடைந்த 438 பேருக்கு இழப்பீடாக மொத்தம் 64 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் பல நிறுவங்களின் ஆதரவுடன் சேதங்களின் மதிப்பீட்டுப் பணி தொடர்கிறது என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.