அனுமதியின்றி, இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்களுக்கு பதவி- சம்பள உயர்வு மேற்கொள்ளவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கை சுதந்திர தேசிய சேவை சங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான வழக்கு விசாரணை, இன்று (புதன்கிழமை) நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பிரியந்த ஜயவர்தன, முர்து பெர்னாண்டோ, விஜித் மலல்கொட ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாத்தால் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த தடையுத்தரவு ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படுமென்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.