இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர், முதல் முறையாக டி.ராஜா இன்று (புதன்கிழமை) சென்னை வந்தார்.
இதன்போது தியாகராயநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த டி.ராஜா, கம்யூனிஸ்ட் கட்சிகளை இணைக்கும் முயற்சி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
சமீப காலமாக தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படாமல் இருப்பதாக குற்றம்சாட்டிய டி.ராஜா, இந்திய தேர்தல் ஆணையர்களை தேர்வுக்குழு மூலம் நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.