வேலூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேவி குப்பத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாற்றினார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “சட்டப்பேரவை மாண்பை சீர்குலைத்தவர்கள் தி.மு.க.வி.னர். நாட்டை ஆட்சி செய்வதற்கு அவர்களுக்கு தகுதி இல்லை. முதல்வர் நாற்காலி மீது ஸ்டாலினுக்கு அவ்வளவு பிரியம்.
வேலூர் தேர்தலை நிறுத்த நாங்கள் முயற்சிக்கவில்லை. வேலூரில் தி.மு.க.வினர் பதுக்கி வைத்திருந்த பணம் பிடிப்பட்டதால் தேர்தல் நிறுத்தப்பட்டது. உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க தி.மு.க. தான் காரணம். சிறுபான்மையின மக்களின் குரல் மேலவையில் ஒலிக்க வேண்டும் என்பதற்காக பதவி கொடுத்துள்ளோம்.
கர்நாடகாவில் நடந்தது போல் தமிழகத்திலும் நடக்கும் என்கிறார் ஸ்டாலின். தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால்தான் கர்நாடகாவிலும் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. அ.தி.மு.க.வை உடைக்க முயற்சிப்பவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். இங்கு பெரும்பான்மை ஆட்சி நடைபெற்று வருகிறது. நல்லது நினைத்தால் பதவி கிடைக்கும். கிராமப் பகுதிகளில் நூறுநாள் வேலை திட்டம் தொடரும்” என அவர் தெரிவித்தார்.