இதன் பின்னரே, முக்கிய பிரச்சினைகளான செம்மலை நீராவியடிப் பிள்ளையார் மற்றும் வென்னீரூற்று பிரச்சினைகளைக் கதைக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
கிளிநொச்சி, வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசில் வழங்கும் நிகழ்வு கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3.30 மணியளவில் கல்லூரி முதல்வர் சவிரி பூலோகராஜா தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வின் பிரதம அதிதியாக அமைச்சர் மனோ கணேசன் கலந்துகொண்டதோடு நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீறிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது உரையாற்றிய அமைச்சர், “மன்னாரில் தமிழ் மக்களுக்கிடையில் அதாவது கத்தோலிக்க, இந்து இளைஞர்களுக்கு இடையில் பிரச்சினை உள்ளது. குறித்த பிரச்சினை எமக்குள்ளேயே காணப்படும் பிரச்சினை. இந்தப் பிரச்சினையை முதலில் தீர்த்து வைக்க வேண்டும்.
இதனைத் தீர்த்துவைக்காது நீராவியடி மற்றும் வென்னீருற்று பிரச்சினையைத் தீர்க்க முடியாது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் ஒத்துழைப்புத் தரவேண்டும்.
இதனிடையே, நான் அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு எதிர்கட்சி போன்று செயற்படுகின்றேன். கடந்த காலங்களில் மனச்சாட்சிக்கு விரோதமாக அரசுக்கு ஆதரவு வழங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு வழங்கி வருகின்றது.
இந்த ஆதரவு வழங்கப்படாவிட்டால் இதைவிட பெரிய பிசாசு வந்து குந்திவிடும். அதற்காக மனச்சாட்சிக்கு விரோதமாக நாம் அரசை பாதுகாக்க வேண்டிய நிலையில் உள்ளோம். ரணில் மற்றும் மைத்திரி ஆகியோர் பிசாசு எனில் மஹிந்த கொல்லிப் பேய் பிசாசு” என அவர் இதன்போது தெரிவித்தார்.