அந்தவகையில், நீதிபதிகளை 30இல் இருந்து 33 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடிய சட்டவரைபுகள் மற்றும் பல்வேறு விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது உச்ச நீதிமன்றத்தில் தற்போது இருக்கும் நீதிபதிகளின் எண்ணிக்கை, தலைமை நீதிபதியைத் தவிர்த்து 30இல் இருந்து 33 ஆக உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டது.