LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, July 18, 2019

சிங்கத்தை வேட்டையாடி ஒளிப்படம் எடுத்த இளம் தம்பதிக்கு வலுக்கும் எதிர்ப்பு!

கனடாவைச் சேர்ந்த இளம்
தம்பதியொன்று, சிங்கமொன்றை வேட்டையாடி பின்னர் முத்தமிட்டுக் கொண்டு ஔிப்படம் எடுத்த சம்பவத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக ‘சஃபாரி’ எனப்படும் வனாந்தரச் சுற்றுலா மற்றும் மிருகங்களை வேட்டையாடுதல் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றன.

கனடாவைச் சேர்ந்த இளம் தம்பதியான டேரன்-கார்லோன் கார்ட்டர் ஆகியோர் வேட்டையாடும் போட்டி ஒன்றில் பங்கேற்றனர். இதில் சிங்கம் ஒன்றை வேட்டையாடியுள்ளனர். பின்னர் அந்த சிங்கத்தின் உடலுக்கு பின்னே அமர்ந்துக் கொண்டு இருவரும் முத்தமிட்டுக் கொண்டனர்.

இந்தநிலையில், சிங்கங்கள் வேட்டையாடப்படுவதை தடுக்க வேண்டும் என்று சுற்றுலா நிறுவனமான லெகிலிலா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தது.

குறித்த ஔிப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டமைக்கு உலகம் முழுவதிலும் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் நெட்டிசன்கள் பலரும் #StopLionHunting, #StopTrophyHunting என ஹேஷ்டாகுகளை உருவாக்கி ஔிப்படத்தினை பகிர்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில் பல பேஸ்புக் கணக்குகளில் இருந்தும் எதிர்ப்பு வலுவடைந்ததை தொடர்ந்து அந்த சுற்றுலா நிறுவனம் தனது பேஸ்புக் பக்கத்தை முடக்கியுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7