LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, July 21, 2019

சர்வதேச இராஜதந்திரிகளுடன் கூட்டமைப்பு பேச வேண்டும் – சிவசக்தி

சர்வதேச இராஜதந்திரிகளுடாக அரசாங்கதத்திற்கு கால அவகாசத்தினை வழங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ‘நலிவுற்றுப்போன நல்லாட்சியும் தமிழ் மக்களின் எதிர்காலமும்’ எனும் கருத்தாய்வு நிகழ்வு மன்னார் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஆட்சியில் இருக்கக்கூடிய இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான 14 பேருடனேயே இயங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது கொழும்பில் உள்ள அத்தனை இராஜ தந்திரிகளையும் அழைத்து நான்கரை வருடங்களாக நாம் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய போதிலும் இந்த அரசாங்கம் அரசியல் தீர்வில் இருந்து அத்தனை விடயங்களிலும் ஏமாற்றியிருப்பதை எடுத்துக்கூற வேண்டும்.

இன்னும் மூன்று மாதங்களில் ஜனாதிபதித் தேர்தலுக்கு அரசாங்கம் செல்லவுள்ள நிலையில், கூட்டமைப்பு இந்த தருணத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சர்வதேசத்திற்கும், ஜனாதிபதியாக யாரைக்கொண்டு வருவது என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றது. அது தற்போதைய ரணிலா அல்லது மஹிந்த தரப்பில் உள்ள ஒருவரைக் கொண்டு வருவதா என்ற நிலை அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு உள்ளது.

ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் வடக்கு கிழக்கில் உள்ள சிறுபான்மையினரின் வாக்கே தீர்மானிக்கும் சக்கி என்பதால் சர்வதேசமும் தமக்குத் தேவையாக உள்ள தற்போதைய அரசை தக்கவைக்க வேண்டும் என்பதால் இந்த அரசாங்கத்தினை வைத்து தீர்க்கக் கூடிய பிரச்சனைகளை தீர்க்கும்.

இன்று தொல்லியல் திணைக்களம் வடக்கு கிழக்கில் எமது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அத்தனை இடங்களையும் சின்னங்களையும் வைத்துள்ளது. இந்த திணைக்களத்தின் அமைச்சர் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசுக்கு கீழ்யே உள்ளார். இவ்வாறு இருக்கையில் இற்றைவரை இந்த அமைச்சரை இவ்வாறான விடயங்களில் தலையிடுவதை நிறுத்த முடியாமல்தான் உள்ளது.

ஆகவே தற்போதுள்ள ஒரு சந்தர்ப்பம் சர்வதேச இராஜதந்திரிகளை அழைத்து அரசாங்கத்திற்கு கால அவகாசத்தை வழங்கி செய்யக்கூடிய விடயங்களை செயற்படுத்த வேண்டும்” என்றார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7