வவுனியா பிரதேச செயலகப்பிரிவில் காணிகள் முறைக்கேடான முறையில் பலருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா பிரதேச செயலாளர் இவ்விடயங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் வவுனியாவைச் சேர்ந்த க. பார்த்தீபன் என்பவராலும் ஊழலற்ற மக்கள் அமைப்பினூடாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு முறைப்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதன் பிரகாரம் இலங்கை உள்நாட்டலுவல்கள் அமைச்சின் விசேட விசாரணைக்குழு வவுனியாவிற்கு விஜயம் செய்ததுடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் விசாரணையை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.
இதன் ஒருகட்டமாக முறைப்பாட்டாளரும் க.பார்த்தீபனிடம் வவுனியா மாவட்ட செயலகத்தில் விசாரணைகளை முன்னெடுத்து பதிவுகளை மேற்கொண்டிருந்தனர்.
இதன்பிரகாரம் இன்று வவுனியா பிரதேச செயலகத்தில் காணி விடயங்கள் தொடர்பாக ஆவணங்களைத் திரட்டடியதாக தெரியவருகின்றது. இந்த விசாரணைகள் நாளை வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.