பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன மற்றும் ஜப்பான் நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கேஹன்ஜி ஹரதா ஆகியோர் இந்த பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்கள்.
பாதுகாப்பு ஒத்துழைப்பினை பலப்படுத்தும் நோக்கில் இரு நாட்டு பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த ஒப்பந்தம் கைத்தாத்திடப்பட்டது.
இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையில் காணப்படும் பாதுகாப்பு தொடர்பான விடயத்தை இந்த ஒப்பந்தம் மேலும் பலப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.