இன்று (திங்கட்கிழமை) எல்-ஓபீட் என்ற நகரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் மாணவர்கள் நால்வர் உட்பட முதியவர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக எதிர்க்கட்சி மருத்துவர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சூடானின் வடக்கு கோர்டோபன் மாநிலத்தில் உள்ள முக்கிய நகரத்தில் உயர்நிலைப் பாடசாலை மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது குறித்த ஐந்து பேரும் தாக்கப்பட்டனர் என்றும் அவர்கள்
கூறியுள்ளனர்.
சூடானின் நீண்டகால தலைவரான உமர் அல்-பஷீரை கடந்த ஏப்ரல் மாதம் ஆட்சில் இருந்து வெளியேற்றி சூடானின் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.
இதனை அடுத்து தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அடிக்கப்பட்டும் துன்புறுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட காணொளிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகின.
இதனை அடுத்து மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.