(ஜெ.ஜெய்ஷிகன்)
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசசெயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவன் பிரதேசத்தில் ஆற்றிய மகத்தான சேவையை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (19) பிற்பகல் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் சௌ.சிவநேசராஜா, கணக்காளர் திருமதி.டிலானி ரெய்வதன், நிருவாக உத்தியோகத்தர் ஆர்.பாஸ்கரன், கிராமசேவையாளர்கள், செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பிரதேச செயலாளருக்கு மகத்தான கௌரவிப்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
வாழைச்சேனை பிரதேசத்தில் தீர்க்கப்படாதிருந்த பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதாகவும் குறிப்பாக வீட்டுத்திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் முன்னின்று செயற்பட்டதாகவும் எப்பொழுதும ந் சிலாகித்துப் பேசப்பட்டது.
சிறந்த பிரதேச செயலாளராக, நல்ல நிருவாகியாக சிக்கலான பிரச்சினைகளை சிறப்பாக கையாளும் திறனைப் பலரும் பாராட்டிப் பேசினர்.
உதவித்திட்டமிடல் பணிப்பாளர் சௌ.சிவநேசராஜா வன்னியசிங்கம் வாசுதேவனின் சேவையைப் பாராட்டி உத்தியோகத்தர்கள் சார்பில் பொன்னாடையைப் போர்த்தி கௌரவித்தார். திருமதி.டிலானி ரெய்வதன் நினைவுப் பரிசு வழங்கிவைத்தார். கிராமசேவையாளர்களால் பிரதேச செயலாளருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.