செய்யப்பட்ட வைத்தியர் ஷாபி ஷியாப்தீனுக்கு பிணை வழங்கி குருணாகல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வைத்தியசர் ஷாபிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (வியாழக்கிழமை) குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இன்றைய விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்ட வைத்தியரை 250,000 ரூபாய் ரொக்க பிணையிலும் 2.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள நான்கு சரீரப்பிணையிலும் நீதிமன்றம் விடுவித்தது.
குற்றவியல் புலனாய்வுத் துறையின் காவலில் இருந்த வைத்தியர் இன்று இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகியதால், நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
பயங்கரவாதத்துடன் தொடர்பு, பணமோசடி மற்றும் சிகிச்சையின்போது கருத்தடை செய்தல் போன்ற பல குற்றச்சாட்டுக்களில் அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இருப்பினும் வைத்தியர் ஷாபி, குடும்பக் கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சையை செய்தார் என்பதற்கான சாட்சியங்கள் தமது விசாரணைகளில் கிடைக்கவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.