குறித்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவித்த அவர், குறித்த ஆவணம் போலியானது என்றும் சரியான ஆவணம் தன்னிடம் உள்ளது என்றும் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் ஆவணம் போலியானது. என்னிடம் உண்மையான நகல் உள்ளது. இருப்பினும், உண்மையான நகலை ஊடகங்களுடன் பகிர்வதற்கான தேவை இல்லாததால் அதனை வெளியிடப்போவதில்லை.
குறித்த ஆவணங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தேவைப்படும் பட்சத்தில் அந்த ஆவணங்களை வழங்க நான் தயாராக இருக்கின்றேன்.
நான் இனிமேல் இரட்டை குடிமகன் அல்ல. இலங்கைக்கான புதிய கடவுசீட்டை பெற்றதிலிருந்து நான் இலங்கை குடிமகன்.
எனவே முன்பு வைத்திருந்த இரட்டை குடியுரிமை கொண்ட கடவுசீட்டை திருப்பி அனுப்பியுள்ளேன். இது குடிவரவு கட்டுப்பாட்டாளருக்கு தெரியும்” என கூறியுள்ளார்.