மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் மாகாண மட்டத்தில் உதைப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி அதிபர் எஸ்.எச்.பிர்தௌஸ் தெரிவித்தார்.
திங்கட்கிழமை திருகோணமலையில் பாடசாலைக்கிடையில் நடைபெற்ற கிழக்கு மாகாண மட்ட உதைப்பந்தாட்ட போட்டியில் 18 வயதுக்குட்பட்ட அணி வெற்றி பெற்று அகில இலங்கை ரீதியில் நடைபெறும் போட்டிக்கு தெரிவாகி உள்ளனர்.
காத்தான்குடி மத்திய கல்லூரியின் 18 வயதுக்குட்பட்ட அணியின் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை அணியுடன் இறுதிப் போட்டியில் விளையாடி வெற்றி பெற்றுள்ளனர்.
தேசிய மட்டத்திற்கு தெரிவாகி பாடசாலைக்கும், வலயத்திற்கும் பெருமை சேர்த்த மாணவர்கள் மற்றும் மாணவர்களை ஊக்குவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக பாடசாலை அதிபர் தெரிவித்தார்.