காலநிலை நிலவி வருவதால், பல இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.
பலத்த காற்றின் காரணமாக தெனியாய கந்தில்பான ஸ்ரீ ரனசிங்காராம விஹாரை மீது அருகில் இருந்த மரம் இன்று (சனிக்கிழமை) முறிந்து விழுந்ததில் விகாரை சேதமடைந்துள்ளது.
அத்தோடு தெனியாய சின்னத்தோட்டம் லயன் அறை ஒன்றின் கூரை காற்றினால் சேதமடைந்துள்ளது.
இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட பலத்த காற்று, மண்சரிவு மற்றும் வௌ்ளம் காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அத்தோடு, 8 மாவட்டங்களைச் சேர்ந்த 4,738 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.