LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, July 27, 2019

நீதியை பெற்றுத்தராத அரசாங்கத்தையும் சர்வதேசத்தையும் வன்மையாக கண்டிக்கின்றோம் – உறவுகள்

இலங்கை அரசாங்கமோ, சர்வதேச
சமூகமோ தமக்கான நீதியை விரைவில் பெற்றுத்தருவதற்கு முயலாமையினை வன்மையாக கண்டிப்பதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வலிந்து காணமால் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்பதற்காக போராடி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ள நிலையிலும்  வடக்கு கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அமைப்பின் பிரதி தலைவி அமலநாயகி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கல்லடியில், வடக்கு கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அமைப்பின் ஊடக சந்திப்பு இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.

இந்த சந்திப்பில், பிரதி தலைவி அமலநாயகி தெரிவிக்கையில், “புதுக்குடியிருப்பு, இரணைப் பாலையைச் சேர்ந்த செபமாலைமுத்து திரேசம்மா மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரின் மகன் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 11 வருடங்களாக தனது மகனை தேடி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு உடல் உள ரீதியாக பாதிக்கப்பட்டு அவர் மரணித்துள்ளார்.

எமது போராட்டமானது எமது உறவுகளை மீட்டல், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அறிதல், நீதியைப் பெறல் என்பவற்றுடன் இனிவரும் காலங்களில் எமது சமூகத்திற்கு மட்டுமல்லாமல் மனித குலத்திற்கே இவ்வாறான பிரச்சினைகள் நிகழாதிருக்கவுமேயாகும்.

ஆயினும் எமது போராட்டமானது மிக கடினமானதாகும். ஏனெனில் எமக்கான நீதியை பக்கச்சார்பற்று வழங்கக்கூடிய சர்வதேச பொறிமுறையை கட்டமைக்கவும், நீதியை பெற்றுக்கொள்ளவும் கடுமையாக போராட வேண்டிய நிலை காணப்படுகின்றது.

மனித குலத்திற்கான நீதியானது நபர்களின் எண்ணிக்கை சார்ந்தோ (பெரும்பான்மை) பாதிக்கப்பட்டவர்களிடமுள்ள வளங்கள் சார்ந்தோ அல்லது நீதி வழங்குனர்கள் மற்றும் நீதி வழங்குனர்களின் பங்காளிகளின் தேவையின் அடிப்படையிலோ அமையுமெனின் அது நீதியானதாக அமையாது.

இன்றைய காலத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச நீதிப்பொறிமுறைகள் மேற்கூறப்பட்டதன் அடிப்படையில் இடம்பெறுவதாக நாம் உணர்ந்ததன் விளைவாக உளச்சோர்வுக்கும் நோய்களுக்கும் உள்ளாகி மரணத்தை தழுவிக்கொண்டிருக்கின்றோம்.

2004இல் சந்திரிக்கா அம்மையாரால் உருவாக்கப்பட்ட அதிபர் செயலக ஆணைக்குழுக்களோ. 2013இல் மகிந்த ராஜபக்ஷவினால் உருவாக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவினாலோ தற்போதைய ரணில் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட காணாமல் போனோருக்கான அலுவலகமோ எமக்கான நீதியை பெற்றுக்கொடுக்கவில்லை.

பெற்றுக்கொடுக்கப்போவதுமில்லை என்பதுடன் கால தாமதங்கள் ஊடாக உறவுகளைத் தேடுபவர்களை உடல், உள ரீதியாக பலவீனப்படுத்தி உயிரிழக்கவும் காரணமாக உள்ளன.

அரசியல் பிரதிநிதிகளின் செயற்பாடுகளானது, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவுசெய்யும் வகையில்லல்லாது அரசியல் நலன்களுக்காக எமது பிரச்சினைகள் பயன்படுத்தப்படுகின்து. மாறாக அவர்கள் பாரிய அழுத்தங்களை அரசாங்கத்தின் மீது பிரயோகித்து சர்வதேசத்தின் பங்களிப்புடனான நீதிப்பொறிமுறையை உருவாக்க வேண்டும்.

உள்ளுர் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் போன்று குறைகள் நிறைந்த காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தினை ஏற்றுக்கொள்ளுமாறு எம்மீது அழுத்தம் வழங்குவதணை நிறுத்தி எமக்கான நீதி விரைவில் கிடைக்கப்பெறுவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தமும் ஆலோசனையும் வழங்கவேண்டும்.

இவற்றில் ஏற்படும் தாமதங்களால், நாம் நேரடியாக சர்வதேச விசாரணையினைக் கோருக்கின்றோம் ஆயினும் சர்வதேச நிறுவனங்கள் மீதான நம்பிக்கைகளைக் குறைக்கும் வகையில் அவர்களாலும் காலதாமதம் செய்யப்படுவதோடு நீதி வழங்கலில் அவர்களின் பங்களிப்பு மற்றும் இலங்கை சிங்கள அரசாங்கம் மீதான அழுத்தம் போதாதுள்ளதாக கருதுகின்றோம்.

மக்கள் மயப்படுத்தப்படலூடாக எமது போராட்டம் வலுப்பெறுவதற்கும் அதனூடாக உறவுகளை மீட்கவும் விரைவாக நீதியை பெறவும் முடியுமென கருதுகின்றோம். நீதி வழங்கலில் ஏற்படும் தாமதங்கள் மேலும் உறவுகளைத் தேடும் உறவுகளின் மரணத்திற்கு அடிப்படையாக அமையும். அதன் விளைவுகளும் புறக்கணிப்பும் எமது இனத்தின் எதிர்கால சந்ததியின் அகிம்சை மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்கி பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்நிலை உருவாகாதிருக்க சர்வதேச சமூகத்தின் பிரசன்னத்தினுடனான விரைவான நீதிப்பொறிமுறை அமைக்கப்பட்டு எமக்கான நீதி வழக்கப்படவேண்டும்” என தெரிவித்தார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7