LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, July 20, 2019

முல்லைத்தீவு இயற்கை உரத் தயாரிப்பு – தேசிய ரீதியில் மூன்றாம் இடம்!

தேசிய இளைஞர் சேவைகள்
மன்றத்தின் இளைஞர் ‘சிரமசக்தி மக்கள் கருத்திட்டம்’ திட்டத்தின் கீழ் கள்ளப்பாடு தெற்கு கிராம அலுவலர் பிரிவு இளைஞர்களால் செயற்படுத்தப்பட்ட ‘நெய்தல் இயற்கை உர’ தயாரிப்புத் திட்டமானது தேசிய ரீதியில் மூன்றாம் இடம்பெற்றுள்ளது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற இத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் 21 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இந்த திட்டங்களில் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட கள்ளப்பாடு தெற்கு கிராம அலுவலர் பிரிவில் உதயம் இளைஞர் கழகத்தினர் மேற்கொண்ட நெய்தல் இயற்கை உர தயாரிப்புத் திட்டமானது தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட இளைஞர் சிரம சக்தி மக்கள் கருத்திட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள், கேடயங்கள், பணப் பரிசில்களும் வழங்கும் நிகழ்வு தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்ற குருநாகல் மாவட்டத்தில் இன்று  (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது

இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தின் திட்டத்திற்கு  மூன்றாம் இடம் அறிவிக்கப்பட்டு 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலை முல்லைத்தீவு மாவட்ட இளைஞர்களிடம் வழங்கப்பட்டிருக்கின்றது.

குறித்த திட்டத்தில் பணப் பரிசிலை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடக்கு மாகாண பணிப்பாளர் சரத் சந்திரபால, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகத்தினுடைய இளைஞர் சேவை அதிகாரி T.ரதீசன், அப்பகுதி கிராம அலுவலர், இளைஞர் கழக உறுப்பினர்கள் சென்று இந்த பரிசுகளை பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை, மாவட்ட ரீதியான வெற்றிக்கான பரிசுகளாக முல்லைத்தீவு மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்ற குறித்த நெய்தல் திட்டத்திற்கு ஐந்து இலட்சம் ரூபாய் பெருமதியான காசோலையும், இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட மாந்தை கிழக்கு பிரதேசத்திற்கு 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலையும், மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்ட துணுக்காய் பிரதேசத்திற்கு 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலையும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7