பிரேசில் காற்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் மீது பிரேசிலைச் சேர்ந்த நஜிலா ட்ரின்டேட் என்ற 26 வயதான மொடல் அழகி பாலியல் துஸ்பிரயோகக் குற்றச்சாட்டை சுமத்தினார்.
நெய்மருடன் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவரின் அழைப்பின் பேரில் பரிஸில் உள்ள நட்சத்திர விருந்தகத்தில் சந்தித்த போது ஆக்ரோஷமாக நடந்து கொண்ட நெய்மர் பலவந்தமாக பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டதாகவும் பொலிஸில் முறைப்பாடு அளித்தார்.
ஆனால் அந்த பெண்ணுடன் பழக்கம் இருந்தது உண்மை, எனினும், தன் மீதான குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று நெய்மர் மறுத்தார். தன்னிடம் இருந்து பணம் பறிக்கவே இந்த மாதிரியான நாடகத்தை அரங்கேற்றியதாகவும் நெய்மர் பதிலுக்கு குற்றம்சுமத்தினா்.
இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக நெய்மார் ரியோ டி ஜெனீரோவில் உள்ள பொலிஸ் தலைமையகத்தில் முன்னிலையாகி விளக்கம் அளித்தார்.
காற்பந்து நட்சத்திரமான நெய்மருக்கு எதிராக எழுந்த பாலியல் முறைப்பாடு, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.