குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் ஹமில்டன் பகுதியில் நேற்று (புதன்கிழமை) மருத்துவர் ஒருவர் கூறிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் வைத்து கொலை செய்யப்பட்டிருந்தார்.
இதுகுறித்து விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
ஹமில்டனைச் சேர்ந்த 49 வயதான சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபருக்கு எதிராக பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் வைத்தே மருத்துவர் ஒருவர் கூறிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ள விவகாரம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.