பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பிரித்தானியாவை ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றின் பாதைக்குக் கொண்டுசென்று விட்டார் எனவே அது தவிர்க்கமுடியாதது என ஸ்கொலாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்ரேர்ஜன்
நிக்கோலா ஸ்ரேர்ஜன், எடின்பேர்க்கில் உள்ள தனது உத்தியோகப்பூர்வ பியூட் ஹவுஸில் நேற்று புதிய பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது பேரழிவானது என்பது தனக்குத் தெளிவாகத் தெரியும் என்றும் இதனால் ஸ்கொட்லாந்தில் 100,000 வேலைகளை இழக்கநேரிடும் என்றும் பொருளாதாரம் மந்தநிலைக்குச்செல்லும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது இருதரப்பும் நல்லெண்ணத்துடன் செயற்பட்டால் ஒரு புதிய பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை உருவாக்க முடியும் என்று நிக்கோலா ஸ்ரேர்ஜனிடம் பிரதமர் ஜோன்சன் கூறியுள்ளார்.
மேலும் ஏற்கனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது என்றும் ஆயினும் ஒரு புதிய ஒப்பந்தத்தைத் தொடர தான் முயற்சியை மேற்கொள்வேன் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒக்ரோபர் 31 க்குள் ஒப்பந்தத்துடனோ அல்லது ஒப்பந்தம் இல்லாமலோ ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் என்று உறுதியளித்துள்ளார்.