தேசிய மக்கள் சக்தி அமைப்பினரால் கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த மாதம் 18 ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெறும் கூட்டத்தின் போது அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் ஜே.வி.பி அனைத்து துறைகளிலும் அதன் நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் என தெரிவித்த டில்வின் சில்வா, அடுத்து நடைபெறும் ஜனாதிபதித் தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களை தேசிய மக்கள் சக்தி அணியின் கீழ் ஜே.வி.பி. எதிர்கொள்ளும் என்றும் கூறினார்.