தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளும் பந்தலுக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) மாலை 4.30 மணியளவில் எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது பிரதமர் யாழ் நோக்கிய பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடிகளை ஏந்தி எதிர்ப்பு பதாதைகளுடன் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட உறவுகள் இதில் கலந்து கொண்டனர்.
இதன்போது எங்களுக்கு வடகிழக்கு இணைக்கப்பட்ட முழுமையான கூட்டாட்சியே தேவை, உங்கள் ஏக்கிய ராஜ்யாவை குப்பையில் போடுங்கள், ரணிலே எங்கள் தமிழர் இராஜ்ஜியத்தைவிட்டு வெளியேறு போன்ற பல்வேறுபட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.