ரெவெல்ஸ்டோக் மற்றும் கோல்டன் இடையே நெடுஞ்சாலை 1 இல் கடந்த சனிக்கிழமை மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.