ஏனெனில் இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் மீதோ அவற்றினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மீதோ எவ்வித நம்பிக்கையும் தமக்கு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) மூன்று மாதங்கள் பூர்த்தியடைந்துள்ளன.
இதனை முன்னிட்டு கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் இடம்பெற்ற விஷேட ஆராதனையில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அத்துடன் இஸ்லாத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை திரிவுபடுத்தி அடிப்படைவாதத்தில் ஈடுபடுபவர்களை முஸ்லிம்கள் அவர்களது சமூகத்திலிருந்து முற்றாக ஒதுக்கி விடவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.