சூதாட்ட நிலையமொன்றை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது அங்கிருந்த குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தின்போது பொலிஸ் அதிகாரிகள் இருவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றுமொருவர் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்